அகதிகளின் மரணங்களை தவிர்க்க அதிக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

சனி ஓகஸ்ட் 29, 2015

அகதிகளின் மரணங்களை தவிர்க்க அதிக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஒஸ்ட்றியாவில் 71 அகதிகளின் சடலங்கள் பாரவூர்தி ஒன்றில் இருந்து நேற்று மீட்கப்பட்டிருந்தது.

 

அவர்கள் சிரியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கி சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் லிபிய கடற்பரப்பில் நேற்று மூழ்கிய படகுகளில் 200க்கும் அதிகமானவர்குள் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாக அடைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

 

இவ்வாறான மரணங்களை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.