அகதிகளை அமெரிக்கா பொறுப்பேற்பது உறுதி

புதன் நவம்பர் 16, 2016

பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நியாயமான அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்று அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒபாமாவின் நிர்வாகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அகதிகளுக்கான திட்டத்தில் பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை அமெரிக்கா பொறுப்பேற்க தீர்மானித்தது.

இந்நிலையில் தற்போது டொனால்ட் டரம்ப இதனை ஏற்றுக்கொள்வாறா? என்ற கேள்வியெழுந்திருந்த நிலையில், குறித்த திட்டம் அமுல்படுத்தப்படும் என ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.