அச்சுறுத்தலை மீறிய மக்களே உயிரிழந்தனர்!

April 21, 2017

கொழும்பு மாநகர சபையின் அறிவித்தலுக்கு அமைய வெளியேறாத மக்களே மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்ததாக மேல் மாகாண முதலமைச்சர் இறுசு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

இறுசு தேவப்பிரிய “மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பலவிதமானக் கருத்துகளை முன்வைக்கின்றனர். நாங்கள் இந்தப் பிரச்சினைக்கு முழுமையாகப் பொறுப்பேற்கிறோம். எவர் மீதும் பலி சுமத்திவிட்டு தப்பிக்க முயற்சிக்கவில்லை.

இந்த குப்பைமேடு சரிந்துவிழுந்ததில் நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டியதாவது, மீண்டும் இவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்படாத வண்ணம் முறையான கழிவு நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதையே.

கடந்த மாதம் 31ஆம் திகதி அனர்த்தம் தொடர்பில் இந்த மக்களுக்குத் தெளிவுப்படுத்தி மக்களை குறித்த பிரதேசத்தில் இருந்து அப்புரப்படுத்த கொழும்பு மாநகரசபையின் ஊடாக நடவடிக்கை எடுத்தோம். ஆனால், அந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் வெளியேற மறுத்துவிட்டனர். 40 பேர் வரை வெளியேரினர். அவர்களுக்கு வீட்டு வாடகைக்கானப் பணத்தை அரசு முழுமையாக பொறுப்பேற்றது.

அனர்த்தம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்து மேலும் பல குடும்பங்களைச் சேர்ந்த 40 பேரை அகற்ற நடவடிக்கை எடுத்தோம். அவர்கள் கேட்கும் அளவு பணத்தை கொடுக்கவும் நாங்கள் தயாராக இருந்துதோம். ஆனால், சில அரசார்பற்ற நிறுவனங்களின் பேச்சை கேட்டு அந்த மக்கள் வெளியேற மறுத்துவிட்டனர். அதன் காரணமாகவே அவர்களின் உயிர்கள் பறிபோனது.

தற்போது குறித்த நிறுவனங்கள் அதற்கு பொறுப்பேற்குமா? அப்பாவி உயிர்கள் பறிபோய்விட்டன. எனவே, இதனை அரசு முழுமையாகப் பொறுப்பேற்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை விரைவில் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கொழும்பில் இருந்தும் மீத்தொட்டமுல்லையில் இருந்தும் அகற்றப்படும் 1000 டொன் குப்பையை கரதியான மற்றும் முத்துராஜாவெளியவில் சேகரித்து மாற்றுத் தீர்வுகாண உள்ளோம்.

இந்தக் குப்பைகளை வகைப்படுத்தி மின்சார உற்பத்திக்கான அடித்தளத்தை அரசு ஈட்டுள்ளது. அதற்கான உடன்பாடுகள் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளன. எதிர்வரும் மூன்று வருடங்களில் மேல் மாகாணத்தை குப்பைகள் அற்ற மாகாணமாக மாற்றிமையக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான சர்வதேச முதலீடுகளையும், தொழில்நுட்பத்தை அரசு பெற்றுக்கொள்ளவுள்ளது.

 

செய்திகள்
வியாழன் May 24, 2018

விலகிய 16 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும், கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.