அடுத்த படம் பற்றிய தகவலை வெளியிட்டார் ராஜமெளலி!

ஒக்டோபர் 14, 2017

'பாகுபலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ராஜமெளலி.  'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய படங்களைத் தொடர்ந்து, ஓய்விலிருந்து வருகிறார் இயக்குனர் ராஜமெளலி. அவருடைய அடுத்த படங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

இந்நிலையில், முதன்முறையாக தனது அடுத்த படங்கள் குறித்து பேசியுள்ளார் ராஜமெளலி. அதில், முதலில் சமூக அக்கறையுடன் கூறிய படமொன்றை முதலில் இயக்க இருக்கிறார். இப்படத்தை தயாரிப்பாளர் டி.வி.வி.தனய்யா தயாரிக்கவுள்ளார். இப்படம் தெலுங்கில் தயாராகிறதா? அல்லது வேறு மொழிகளில் தயாராகிறதா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும் யார் நடிக்கிறார்கள் என்பதும் முடிவாகவில்லை. 

இதனைத் தொடர்ந்து 2019-ல் மகேஷ்பாபு நடிக்கவுள்ள படத்தை இயக்க இருக்கிறார். இதனை கே.எல்.நாராயணா தயாரிக்க இருக்கிறார்.

செய்திகள்