அடையாள அட்டைக்கு கட்டணம்!

Friday August 10, 2018

தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் போது, அதற்கு கட்டணம் அறவிடப்படுமென, உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கட்டணங்கள் யாவும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.அவைத் தொடர்பிலான விவரங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் முதன்முறையாக, தேசிய அடையாள அட்டையை பெறுபவர்கள், 100 ரூபாவை கட்டணமாகச் செலுத்தவேண்டும். இதேவேளை, தேசிய அடையாள அட்டையில் ஏதாவது மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமாயின் அதற்கு 250 ரூபாய் அறவிடப்படும்.  

அத்துடன், காலங்கடந்த தேசிய அடையாள அ​ட்டைக்குப் பதிலாக புதிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு 100 ரூபாய் அறவிடப்படும் என்றும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.