அண்ணா இல்லத்தில் வைகோ

சனி அக்டோபர் 03, 2015

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று 03.10.2015 காஞ்சிபுரம் மாவட்டத்தில் மறுமலர்ச்சிப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குகிறார்.

அதனையொட்டி இன்று காலை காஞ்சிபுரம் சென்ற வைகோ அவர்கள் கழக நிர்வாகிகளுடன் அண்ணா அவர்களின் இல்லம் சென்று அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்று  மாலை 3 மணி அளவில் காஞ்சிபுரம் பெரியார் தூணிலிருந்து தனது மறுமலர்ச்சி பயணத்தை தொடங்கி, தாம்பரம் நகரத்தில் நிறைவு செய்கிறார்