அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சி மோசமாக இருக்கும் - வைகோ விமர்சனம்

Tuesday February 23, 2016

அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியை விட  திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி மோசமாக இருக்கும்  என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.


கரூரில் மக்கள் நலக் கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது வைகோ இவ்வாறு  விமர்சித்துள்ளார்.


திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியானது, ஊழல் கூட்டணி எனவும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், லோக் ஆயுக்தாவை கொண்டு வருவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளதை சுட்டிக் காட்டிய வைகோ, தமிழகத்தில் 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது, ஏன் லோக் ஆயுக்தாவை கொண்டு வரவில்லை? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.