அதிரடிப்படையினர் மீது கல்வீச்சு!

January 12, 2018

பசறை, எல்டெபிவத்தை தோட்டத்தில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட ஆகரதென்ன காவல் துறை   விசேட அதிரடிப்படையினர் மீது, பிரதேச மக்கள் மேற்கொண்ட கல்வீச்சுத் தாக்குதலில், காவல் துறை  அதிகாரி ஒருவர் படுகாயமடைந்து, பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, காவல் துறையினர்  தெரிவித்தனர்.

மேற்படி தோட்டத்தில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு   கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து, காவல் துறை  விசேட அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதனை அறிந்துகொண்ட தோட்ட மக்கள் அதரடிப் படையினர்மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டனரென, பாதிக்கப்பட்ட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பில், பசறைகாவல் துறையினர்   மேலதிக விசாரணைகளை மேற்காண்டு வருகின்றனர்.

செய்திகள்
சனி January 20, 2018

விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல் மிதப்பிகள் இரண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்த நீர்மூழ்கி கப்பல் மிதப்பிகள், விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகியதாகக் குறிப்பிட