அதுக்கு பேரு அறிவுரை இல்லை அக்கறை - சமுத்திரகனி

Saturday August 25, 2018

நடிகர், இயக்குநர் என  இருக்கும் சமுத்திரக்கனி தானும் ஒரு எளிய மனிதன் தான், எனது கருத்துக்களை அறிவுரையாக சொல்லவில்லை, அக்கறையாக தான் சொல்கிறேன் என்றார்.

நாடோடிகள் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் சமுத்திரகனி பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ஆண் தேவதை, வெள்ளை யானை 2 படங்களும் வெளியீட்டுக்கு  தயாராகி இருக்கிறது.

அவரிடம் சமுத்திரகனி என்றாலே அறிவுரை சொல்பவர் என்ற பிம்பம் விழுந்திருக்கிறதே? என்று கேட்டதற்கு “மத்தவங்க மாதிரி நானும் ஒரு எளிய மனிதன்தான். என்னைப் பொறுத்தவரை அதை அறிவுரையா பார்க்கலை; ஒரு அக்கறையாக தான் பார்க்கிறேன்.

ஆனால், சமுத்திரக்கனின்னா அறிவுரைனு ஒரு பேரை இவங்களா வெச்சுட்டாங்க. இதை நான் கடமையாகத்தான் நினைக்கிறேன். மாற்றம் நாளைக்கே வந்திடாது; அதை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்போம்னு இதைப் பண்ணிக்கிட்டிருக்கேன்.

கத்துனா காதுல போய் விழும்னுதான் கத்திக்கிட்டிருக்கேன். அப்படிக் கத்தியும் யாரும் திரும்பலை. அவங்க திரும்புற வரை கத்துறதுதான் என் நோக்கம் என்று கூறினார்.