அத்தியவசிய பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை!

December 06, 2017

அத்தியவசிய பொருட்களான தேங்காய், பருப்பு, இறக்குமதி செய்யப்படும் கிழங்கு மற்றும் கருவாடு ஆகியவற்றின்  அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணையிக்க நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

இதன் படி தேங்காய் 75 ரூபாவாகவும், பருப்பு ஒரு கிலோ கிராம் 130 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் உருளை கிழக்கு ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலை 76 ரூபாவாகவும்  நிர்ணயிக்கப்படவுள்ளது.

வாழ்க்கை செலவு குழுவில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய இந்த உணவு பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது

செய்திகள்
வெள்ளி December 15, 2017

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தெரிவில் தமிழரசுக் கட்சியினருக்கு இடையில் கட்சித் தலைமையகத்தில் நேற்று(14) ஏற்பட்ட கடும் வாக்குவாதம் அடிதடிவரை சென்றுள்ளது.