அனிமோஜி மற்றும் புதிய அம்சங்ளுடன் ஐ.ஓ.எஸ். 11.3 பீட்டா!

வியாழன் சனவரி 25, 2018

அப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 11.3 இயங்குதளம் புதிய அனிமோஜிக்கள் மற்றும் பல்வேறு அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. அப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 11.3 இயங்குதளத்தை புதிய அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது. புதிய அப்டேட்-இல் நான்கு புதிய அனிமோஜி - சிங்கம், கரடி, டிராகன் மற்றும் மண்டை ஓடு உள்ளிட்டவை ஐபோன் X-க்கு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டெவலப்பர்களுக்கு ஏ.ஆர்.கிட் 1.5 (ARKit 1.5) வழங்கப்பட்டிருக்கிறது. 

இவை அதிக துல்லியமான செயற்கை நுண்ணறிவு அனுபவத்தை வழங்கும் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான இம்சங்கள் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

வாடிக்கையாளர்கள் நேரடியாக பிஸ்னஸ் சாட் செய்யும் வகையில் மெசேஜ்களில் வியாபார ரீதியிலான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக பீட்டா முறையில் வெளியிட்டு அதன்பின் பொது மக்களுக்கு ஐ.ஓ.எஸ். 11.3 பதிப்பில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே ஆப்பிள் அறிவித்தபடியே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பேட்டரி விவகாரம் வாடிக்கையாளர்கள் கட்டுப்படுத்தும் படி வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை வாடிக்கையாளர்கள் ஐபோனின் செட்டிங்ஸ் -- பேட்டரி சென்று ஆப்பிள் பவர் மேனேஜ்மெண்ட் (power management) ஆப்ஷனை செயலிழக்க செய்ய முடியும். 

புதிய ஹெல்த் ரெக்கார்டஸ் அம்சம் மருத்துவமனைகள், ஆஸ்பித்திரி மற்றும் ஏற்கனவே இருக்கும் ஹெல்த் செயலி உள்ளிட்டவை ஒரே செயலியாக மாற்றப்பட்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை அறிந்து கொள்ள வழி செய்யப்பட்டிருக்கிறது. இதில் மருத்துவம் சார்ந்த வெவ்வேறு வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது..

ஐ.ஓ.எஸ். 11.3 கூடுதல் அம்சங்கள்:

- அப்பிள் மியூசிக் செயலியின் ஹோம் திரை மியூசிக் வீடியோக்களுக்கும் பொதுவானதாக விரைவில் மாற்றப்படும். வாடிக்கையாளர்கள்  விளம்பர இடையூறின்றி மியூசிக் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும். மேலும் புத்தம் புதிய வீடியோக்களை வெவ்வேறு பிரிவுகளில் இருந்தும் தொடர்ந்து பார்க்க முடியும்.

- அப்பிள் நியூஸ் அம்சம் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். இதில் புதிய வீடியோ க்ரூப் மற்றும் மேம்படுத்தப்பட்ட முக்கிய செய்திகள் பிரிவும் வழங்கப்பட்டுள்ளது. 

- ஹோம்கிட் மென்பொருள் ஆத்தென்டிகேஷன் டெவலப்பர்களுக்கு ஏற்கனவே இருக்கும் அகசஸரிகளுக்கு ஹோம்கிட் சப்போர்ட்-ஐ பாதுகாப்பாக வழங்க முடியும்.

- மேம்படுத்தப்பட்ட மொபைல் லொகேஷன் (Advanced Mobile Location) அம்சம் வாடிக்கையாளர் இருக்கும் நாடுகளில் AML வசதி இருப்பின் வாடிக்கையாளர் இருக்கும் முகவரியை தானாக அனுப்பி விடும். 

ஐ.ஓ.எஸ். 11.3 டெவலப்பர் பிரீவியூ இன்று முதல் கிடைகக்கிறது. இதை் தொடர்ந்து பொது மக்களுக்கு பீட்டா பிரீவியூ ஐ.ஓ.எஸ். 11.3 அப்டேட் மூலம் வழங்கப்படும். 

அப்பிள் ஐ.ஓ.எஸ். 11.3 அப்டேட் ஐபோன் 5எஸ் மற்றும் அதன் பின் வெளியான ஆப்பிள் ஐபோன்கள், ஐபேட் ஏர், ஐபேட் ப்ரோ மாடல்கள், ஐபேட் 5-ம் தலைமுறை, ஐபேட் மினி 2 மற்றும் ஐபாட் 6-ம் தலைமுறை சாதனங்களுக்கு சில வாரங்களில் வழங்கப்பட இருக்கிறது.