அனு­மதி வழங்­கப்­ப­டாத நிலை­யில் வெளிநாடு சென்று திரும்பிய அனந்தி!

Friday August 10, 2018

வடக்கு மாகாண சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் வெளி­நாடு செல்­வ­தற்கு விடு­மு­றைக்கு ஆளு­நர் குரே­யி­டம் விண்­ணப்­பித்­தி­ருந்­தார். அவ­ருக்கு அனு­மதி வழங்­கப்­ப­டாத நிலை­யி­லும், வெளி­நாட்­டுக்­குச் சென்று திரும்­பி­யுள் ளார்.   வடக்கு மாகா­ண­சபை அமைச்­சர்­கள், உறுப்­பி­னர்­கள் வெளி­நாட்­டுக்­குச் செல்­ல­வ­தற்கு ஆளு­ந­ரின் அனு­மதி பெற்­றுக்­கொள்­ள­வேண்­டும்.

 வடக்கு மாகாண மக­ளிர் விவ­கார அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன், வெளி­நாடு செல்­வ­தற்கு அனு­ம­தி­கோரி வடக்கு மாகாண ஆளு­ந­ருக்கு அவைத் தலை­வர் ஊடாக அனுப்­பி­யுள்­ளார்.

 வடக்கு அமைச்­சர்­கள் யார் என்­பது தொடர்­பில் சர்ச்சை நில­வு­கின்­றது. இத­னைக் குறிப்­பிட்ட ஆளு­நர், திரு­மதி அனந்தி சசி­த­ர­னின் வெளி­நாட்­டுப் பய­ணத்­துக்­கான விடு­மு­றைக்கு அனு­மதி வழங்­க­வில்லை.   ஆனால், திரு­மதி அனந்தி சசி­த­ரன் கடந்த வாரம் இந்­தி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்டு நாடு திரும்­பி­யுள்­ளார். 

 இந்த நிலை­யில் திரு­மதி அனந்தி சசி­த­ரன் உறுப்­பி­ன­ராக, சென்று வந்த வெளி­நாட்­டுப் பய­ணத்­துக்­கான அனு­ம­தியை கோரி­யுள்­ளார். அவைத் தலை­வர், அனு­மதி கோரலை சபைக்கு நேற்­றுச் சமர்­பித்­தார். சபை­யின் அனு­ம­தி­யைப் பெற்­றுக் கொண்­டார். வடக்கு மாகாண ஆளு­ந­ருக்கு அதனை அனுப்பி வைக்­க­வுள்­ளார்.