அனைத்துலக ரீதியில் நடைபெறும் தமிழ்மொழி பொதுத் தேர்வு 2018 !

May 31, 2018

பிரான்சில்  தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஏற்பாட்டில் தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தின் ஒழுங்கில்  அனைத்துலக ரீதியில் நடைபெறும் தமிழ்மொழி பொதுத் தேர்வு 02.06.2018) சனிக்கிழமை இடம்பெறுகின்றது.

பாரிசையும் பாரிசைச் சுற்றியுள்ள (ile de france )மாணவர்களுக்கு நான்கு பிரிவுகளாக நடைபெறும் இத்தேர்வு மதியம் 13.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. சகல பிரிவு மாணவர்களும் அவர்களின் பிரிவு தேர்வு ஆரம்பமாவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாக மண்டபத்திற்கு வருகை தரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

02.06.2018 சனிக்கிழமை பிரான்சில் நடைபெற்றுவரும் பொதுப் போக்குவரத்து வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது என்பதை கருத்தில் கொள்ளவும்.

தேர்வு நடைபெறும் இடம் :
Maison des examens
7 Rue Ernest Renan,
94110 Arcueil

பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் தேர்வு மண்டபம் தொடர்பான தகவல்களை அவரவர் பள்ளி நிர்வாகிகளிடம் அறிந்து கொள்ளவும்.

தனியார் விண்ணப்பதாரிகளுக்கு ஏற்கனவே அனுப்பிய கடிதத்தில் சகல விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. 
ஏனைய பிற மாவட்டங்கள் தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்வு நிலையங்களில் நடைபெறும்.          
             .
பெருமளவான மாணவர்கள் பரீட்சையில் பங்கு பற்ற இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக அழைத்துவந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பிரான்சில் பாரிசு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் புற மாவட்டங்களிலுமாக மொத்தம் 5 ஆயிரத்து 893 மாணவர்கள்  இம்முறை தேர்வுக்குத் தோற்றவுள்ளதாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....