அனைத்து வகையிலும் நலமாய் வாழ உலகின் சிறந்த 12 நாடுகள்

February 03, 2018

அனைத்து வகையிலும் நலமாய் வாழ்வதற்கு உலகின் சிறந்த 12 நாடுகள் கொண்ட பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள மேம்பாட்டு அமைப்பின் ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள மேம்பாட்டு அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக்காக சுமார் 200 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. நீண்ட ஆயுள், உடல்நலம், செலவினம், கல்வி, பாலின சமத்துவம், பொருளாதாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்நிலையில், அனைத்து வகையிலும் நலமாய் வாழத்தகுந்த உலகின் சிறந்த 12 நாடுகள் கொண்ட பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள மேம்பாட்டு அமைப்பின் ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

நீண்ட ஆயுளுக்காக ஹாங்காங்கும், பொருளாதாரத்துக்காக அமெரிக்காவும், கல்வித்துறைக்காக கனடாவும், உயர்தர வாழ்க்கை செலவினம் மற்றும் ஆயுளுக்காக ஐஸ்லாந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

குற்றங்கள் குறைவுக்காக அயர்லாந்தும், வருவாய் சமநிலைக்காக நெதர்லாந்தும், சராசரி செலவினம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக சிங்கப்பூரும், இரு பாலினத்தவருக்கும் சராசரி வருமானம் பெறுவதற்காக டென்மார்க்கும் தேர்வாகியுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச தங்கும் வசதி மற்றும் மேல்நிலை படிப்பு முடித்தவர்களுக்காக ஜெர்மனி, மலேரியா, ஹெச்.ஐ.வி உள்ளிட்ட நோய் தாக்கம் இல்லாததற்காக சுவிட்சர்லாந்தும், 20 ஆண்டு பள்ளி படிப்புக்காக ஆஸ்திரேலியாவும், உயர்தர வாழ்க்கை வாழ்வதற்காக நார்வேயும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

செய்திகள்