அன்னை பூபதிக்கு அதி உன்னத சிவில்சமூக செயற்பாட்டாளர் கௌரவம்!

April 19, 2017

அன்னை பூபதிக்கு அதி உன்னத   சிவில்சமூக செயற்பாட்டாளர் என்ற கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மட்டக்களப்பு மாவட்ட சிவில்சமூக அமைப்புக்களின் ஒன்றியம் முன் வைத்துள்ளது.

இன்று மட்டக்களப்பு நாவலடி அமைந்துள்ள அன்னை பூபதி அவர்களின் நினைவிடத்தில் நடைபெற்ற பூபதி அம்மையாரி 29 வது ஆண்டு நினைவு தினத்தில் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளனர்.

ஒரு நாட்டின் ஆக்கிரமிப்பு படைக்கு எதிராக தன்னிடம் இருந்த அகிம்சை என்ற ஆயுதம் ஏந்தி  இறுதி வரை போராடி உயிர் நீத்த  பூபதி தாயின் தியாகத்தை நாட்டில் உள்ள அனைத்து சிவில்சமூக அமைப்புக்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் இனிவரும் காலங்களில் நினைவு கூர்ந்து அவரின் தியாகத்திற்கு மதிப்பளித்து அவரை இலங்கையின் அதி உன்னத சிவில்சமூக செயற்பாட்டாளராக கௌரவப்படுத்த வேண்டும் என்ற
கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

இன் நாளில் இலங்கையின் அதி உன்னத   சிவில்சமூக செயற்பாட்டாளர் என்ற கௌரவத்தை அன்னை பூபதிக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்களின் சார்பாக நாம் முன்வைக்கின்றோம். இலங்கை வரலாற்றில் ஒரு சிவில்சமூக செயற்பாட்டாளரினால் தான் சார்ந்த மக்களுக்கான நீதியையும் சமாதானத்தையும் பெற்றுக் கொடுப்பதற்காக  மேற்கொள்ளப்பட்ட அதிஉயர் தியாகமாக அன்னை பூபதி அவர்களின் மரணத்தையே கருதுகின்றோம்.

அன்னை பூபதி அம்மையார் அவர்களின் உயிர் பிரியும் வரையிலான உண்ணாவிரத போராட்டமானது மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிவில் சமூகத்தின் அதி உயர் எழுச்சியின் அடையாளம் ஆகும்.

மட்டு-அம்பாறையில் செயற்பட்ட சிவில்சமூக அமைப்பான அன்னையர் முன்னணியில் இருந்து கொண்டு இந்து சமுத்திரப் பிராந்திய வல்லரசான  இந்திய படைகளுக்கு எதிராக தனது உறுதி தளராத ஆன்ம பலத்துடன் உண்ணாவிரதம் என்ற அகிம்சை போராட்டத்தை நடாத்தி தனது மக்களின் சமாதானத்திற்காக உயிர் நீத்த
இலங்கையின் உண்மையான சிவில்சமூக செயற்பாட்டாளரான  அன்னை பூபதி அம்மையாரின் தியாகம் முப்பதாண்டு கால யுத்தம் காரணமாகவும் பிராந்திய உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவும்  முடி மறைக்கப்பட்டுவிட்டன இதுவே பெரும்பான்மை இனத்தில் அல்லது சர்வதேச நாடுகளில் இதுபோன்ற தியாகங்கள் மேற்கொள்ளப்பட்டால் அவர்களை அந்த நாட்டு அரசாங்கங்களே கௌரவப்படுத்தியிருக்கும் ஆனால் இலங்கையை பொறுத்தமட்டில் இன்னும் அந்த நிலை உருவாகவில்லை தமிழர்கள் என்பதற்காக அனைத்தையும் விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட்டு பார்த்து அனைத்து சிவில்சமூக செயற்பாட்டாளர் களின் தியாகங்களையும் வெளிக்கொண்டுவர முடியாது தடை விதித்து வருகின்றனர் இந்த நிலை மாறவேண்டும். அந்த மாற்றம் தியாகத் தாய் அன்னை பூபதியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

தனது சமூகத்திற்காக ஒரு நாட்டின் ஆக்கிரமிப்பு படைக்கு எதிராக தனது மக்கள் நிம்மதியாக சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த மாபெரும் சிவில்சமூக செயற்பாட்டாளரான அன்னை பூபதி அவர்களை இலங்கையின் உன்னதமான உண்மையான தலைசிறந்த சிவில்சமூக செயற்பாட்டாளர் என்ற உயர் அந்தஸ்தை நாம் வழங்குகின்றோம்.

இதனை இலங்கையில் உள்ள அனைத்து சிவில்சமூக அமைப்புக்களும்  ஏற்றுக்கொண்டு அவரின் தியாகத்திற்கு மதிப்பளித்து நீங்களும் அவரை இலங்கையின் தலைசிறந்த சிவில் சமூக செயற்பாட்டாளராக அடையாளப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

செய்திகள்
வெள்ளி June 23, 2017

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய உறுதிமொழிக்கு அமைய, காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான அலுவலகத்தை அமைக்கும் பொறிமுறை இடம்பெறுகிறது.

வெள்ளி June 23, 2017

இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கலந்துரையாடலின் போது மோதல் ஏற்பட்டுள்ளது.

வைத்தியர் ஒருவரை மற்றுமொரு வைத்தியர் தாக்கியபோதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி June 23, 2017

அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் பப்புவா நியூகினியவின் மானஸ் மற்றும் நவுறுதீவு முகாம்களில் உள்ள இலங்கையர்களை அமெரிக்காவில் குடியமர்த்தும் திட்டம் இறுதி நிலையை அடைந்துள்ளது.

வெள்ளி June 23, 2017

கண்ணி வெடிகளின் தாக்கங்களற்ற முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பை உருவாக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்துள்ளார்.