அன்பார்ந்த பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர், உடன் பிறந்தோர்களின் கவனத்திற்கு!

Thursday October 04, 2018

தமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான நவம்பர் 27ம் நாள் தமிழீழ தேசத்திலும், புலம்பெயர்ந்து தமிழீழ மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு ஏற்பாட்டில் பாரிசில் வரும் நவம்பர் மாதம் 27ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாளில் வழமைபோன்று மாவீரர் திருவுருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்படவுள்ளது.

இந்த வணக்க நிகழ்வில் தங்கள் குழந்தைகள், சகோதரர்களாகிய மாவீரர்களின் திருவுருவப்படங்களை இதுவரை வழங்காதவர்கள் எதிர்வரும் 2018 நவம்பர் 15 ஆம் நாளுக்கு முன்பாக படங்களையும் விபரங்களையும் எம்மிடம் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மாவீரர் பணிமனை – பிரான்சு - கைத்தொலைபேசி : 06 10 73 50 18

மேலதிக தொடர்புகளுக்கு :- தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு
116.Rue de Belleville
75020- Paris
தொலைபேசி: 01 43 15 04 21
மின்னஞ்சல் முகவரி: maaveerarpanimanai.fr@gmail.com