அப்பா எப்ப வருவீங்க?

புதன் மார்ச் 21, 2018

தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்து செல்லப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகரினின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் சங்கீதா ஏறியமை தொடர்பில் சிறப்பான பாடல் .

ஈழத்துப்பித்தன் இணுவையூர் மயூரன் பாடல் வரிகளில், இணுவையூர் உமாசதீஸ் இசையிலும் வெளிவந்த இந்தப் பாடலை, இணுவையூர் உமா சதீஸ் மற்றும் சுப்பர் சிங்கர் புகழ் அரபி ஆகியோர் பாடியுள்ளனர்.

அத்துடன், உமாசதீஸ் காட்சியமைப்பு செய்த இந்த பாடல் பிரான்ஸ் பரிஸிலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்தப் பாடல் வரிகள்,

அப்பா எப்ப வருவீங்கள்
ஆசை முத்தம் தருவீங்கள்
அம்மா போன பின்னால
ஆதரவா யார் எமக்கு
ஆயிரம் உறவு அருகிருந்தும்
அப்பா போல யார் எமக்கு
அண்ணனோட காத்திருக்கேன்
அப்பா எப்ப வருவீங்கள்?
சைக்கிளில பள்ளி செல்ல
சாமத்தில அணைச்சுத் தூங்க
தோளில் வைச்சு சாமிகாட்ட
துயரத்திலும் துணையிருக்க
கை பிடித்து கடை போக
அப்பா எப்ப வருவீங்கள்?
கருவினிலே கண்ட மகளே
கனவாக இருக்குதம்மா
அருகினில் வந்திருந்து
ஆசை முத்தம் தந்துவிட
மனசெல்லாம் தவிக்குதம்மா
காலமொன்று கூடிவரும்
கனவுகள் மெய்ப்படும்
அருகினில் வந்திருப்பேன்
ஆசைகள் கை கூடும்
அதுவரை பொறுத்திடம்மா
அன்பு மகளே… செல்லமகளே..