`அப்பா-2' படம் ஆரம்பம்!

June 18, 2018

சமுத்திரக்கனி இயக்கத்தில் `நாடோடிகள்-2' படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்ததாக `அப்பா' படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கப் போவதாக சமுத்திரக்கனி அறிவித்துள்ளார்.

`காலா' படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள சமுத்திரக்கனி நடிப்பில், அடுத்ததாக `ஆண்தேவை' படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதேநேரத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `நாடோடிகள்-2' படமும் விரைவில் வெளிவர இருக்கிறது. 

இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சமுத்திரக்கனி வெளியிட்டுள்ளார். சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2016-ஆம் வெளியான படம் `அப்பா'. சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, நமோ நாராயணா, கேப்ரியல்லா சார்ல்டன், விக்னேஷ் உள்ளிட்ட பலரும் நடித்த இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை தான் இயக்கவிருப்பதாக சமுத்திரக்கனி அறிவித்திருக்கிறார். 

தந்தையர் தினமான நேற்று தந்தையர் தின வாழ்த்துக்களுடன் `அப்பா-2' படம் ஆரம்பமாகியிருப்பதாக சமுத்திரக்கனி அறிவித்துள்ளார்.

செய்திகள்
வெள்ளி June 29, 2018

60 வயதை தாண்டிய டிராபிக் ராமசாமிக்கு மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன், பேத்தி