அமரர் நாகராசா நவரத்தினராசா தமிழர் அமைப்பு விடுத்துள்ள இரங்கற் செய்தி

புதன் மார்ச் 09, 2016

மூத்த ஊடகவியலாளர், நாகராசா நவரத்தினராசா அவர்களின் மறைவையிட்டு அயர்லாந்து தமிழர் அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றது.
 
தமிழ் தேசிய பற்றாளரும், தமிழினத்தின் விடிவிற்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவருமன அமரர் நாகராசா நவரத்தினராசா  அவர்களுக்கு சிரம் தாழ்த்தி எமது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
கொக்குவில் தலையாழியை  பிறப்பிடமாகவும் மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற சிறப்புத் தலைமை கிராம அலுவலகரும் மற்றும் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் தலைவராகவும் , உதைபந்தாட்டம் கிரிக்கட் விளையாட்டுகளின் நடுவராகவும் மற்றும் யாழ் தாச்சி சங்க போசகரகவும் இருந்தவர். மேலும் கோண்டாவிலில் அமைந்துள்ள நிரு கல்வி நிறுவனத்தில் 1980ம் ஆண்டு தொடக்கம் கணக்கியல் ஆசிரியராகவும் கடமை புரிந்தவர்.
 
அமரர் நாகராசா நவரத்தினராசா  அவர்களது மறைவு உலகளாவிய தமிழ்மக்களை ஆறாத்துயரில் தள்ளியுள்ளது. அவரது மறைவால் வாடும் அவரது துணைவியார், பிள்ளைகள், மருமக்கள், உற்றார் உறவினர் எல்லோருக்கும் அயர்லாந்து தமிழர் அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

 அயர்லாந்து தமிழர் அமைப்பு விடுத்துள்ள இரங்கற் செய்தி