அமெரிக்கத் தூதுவரால் அரசுக்கு நெருக்கடி, மாற்றுவதற்கு நடவடிக்கை

March 14, 2018

சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷாப் ஐ எதிர்வரும் ஜூலை மாதம் மாற்றம் செய்வதற்கு டிரம்பின் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது. 

அத்துல் கேஷாப் சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் உள்விவகாரங்கள் தொடர்பில் அதிக தலையீடுகளைச் செய்துவருகின்றார் என சிறிலங்கா அரச தரப்பினால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. 

இந்நிலையிலேயே அவரை நீக்கி டிரம்பின் நெருங்கிய ஒருவரை சிறிலங்காவிற்கான அமெரிக்காவின் தூதுவராக நியமனம் செய்ய டிரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. 

அதுல் கேஷாப் தலைமையிலான குழு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவிற்கு ஆதரவானவர்கள் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இவர்கள் இந்நாட்டைவிட்டுச் செல்வது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

டிரம்பின் நெருக்கமான குழுவினர் சிறிலங்கா தூதரகத்துக்கு வருகை தருவது அரசாங்கத்துக்கான நெருக்கடிகள் குறைய காரணமாக அமையும் என உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

செய்திகள்
திங்கள் யூலை 16, 2018

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், ம

திங்கள் யூலை 16, 2018

இலங்கையில் இன்று ஜனநாயகம் இழக்கப்பட்டு சர்வாதிகாரமும் இராணுவஆட்சியும் தலைதூக்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

திங்கள் யூலை 16, 2018

சீரற்ற காலநிலை காரணமாக மும்பாய் மற்றும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இரு பயணிகள் விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பட்டுள்ளது.