அமெரிக்காவின் உள்ளக விசாரணை -கருணாநிதி கண்டனம்!

ஞாயிறு ஓகஸ்ட் 30, 2015

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த உள்ளக விசாரணைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பை இந்திய தமிழகத்தின் டீ.எம்.கே. கட்சியின் தலைவர் மு.கருணாநிதி கடுமையாக கண்டித்துள்ளார்.

 


இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியமை குறித்து தான் கவலை அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற ஒரு நிலைமையை தான் ஒரு போதும் எதிர்பார்க்க வில்லையெனவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு அவர் மேலும் கூறியுள்ளார்.