அமெரிக்காவில் சென்னை பெண்ணுக்கு துணை மேயர் பதவி!

Sunday November 19, 2017

அமெரிக்காவில் சீட்டில் நகர துணை மேயராக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்தவர் ஷெபாலி ரங்கநாதன் (38). இவர் அமெரிக்காவில் சீட்டில் நகர துணை மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரை சீட்டில் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜென்னி டர்கன் நியமித்துள்ளார். இவர் ஒரு பொதுச் சேவை அமைப்பின் செயல் தலைவராக இருக்கிறார். ஷெபாலி ரங்கநாதன் பொதுச் சேவை அமைப்பின் செயல் இயக்குனராக பணிபுரிகிறார். இவரது சேவை மற்றும் செயல்பாட்டை கருத்தில் கொண்டு துணை மேயர் பதவிக்கு இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஷெபாலியின் தந்தை பெயர் ரங்கநாதன். இவரது தாயார் ஷெரில். இவர்கள் சென்னையில் தங்கியுள்ளனர். பள்ளிப்படிப்பை நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு கான்வென்ட்டில் ஷெபாலி முடித்தார்.

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.எஸ்.சி. உயிரியல் பட்டப்படிப்பு முடித்தார். அண்ணா பல்கலைக் கழகத்தில் சுற்றுப்புற சூழல் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று தங்க பதக்கம் பெற்றார்.

கடந்த 2001-ம் ஆண்டு மேற்பட்ட படிப்புக்காக அமெரிக்கா சென்றார். இவர் சென்னை படகு கிளப்பில் நடந்த பல்வேறு படகு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.