அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில்

வியாழன் அக்டோபர் 22, 2015

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை என துணை அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

 

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களில், ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில் உள்ளார். ஹிலாரி கிளிண்டன், பல மாதங்களுக்கு முன்பே ஆதரவு திரட்டத் தொடங்கிவிட்டார். தனிப்பட்ட முறையில் தேர்தல் பிரசார நிதியாக அவரிடம் 3 கோடி டொலர் உள்ளதாகக் கூறப்படுகிறது. பல்வேறு மாகாணங்களில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு, கட்சியினரையும் பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

 

இதனிடையே, தற்போதைய துணை ஜனாதிபதி ஜோ பிடன் தேர்தல் களத்தில் இறங்குவார் என்று கடந்த ஒரு மாதமாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் இந்த வதந்திக்கு ஜோ பிடன் முற்றுபுள்ளி வைத்துள்ளார். இன்று ஜோ பிடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”தேர்தல் இறங்குவதற்கான நேரம் கடந்துவிட்டது. எனவே அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை” என தெரிவித்துள்ளார்.

 

ஜோ பிடன் அறிவிப்பால் ஹிலாரி கிளிண்டனுக்கான வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.