அமெரிக்காவுக்கு எதிராகக் கண்டன துண்டறிக்கை பரப்புக! - பழ. நெடுமாறன்

ஞாயிறு செப்டம்பர் 06, 2015

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவற்றைக் குறித்து சர்வதேச விசாரணை தேவையில்லை, சிங்கள அரசே விசாரணை செய்யலாம் என்ற நிலைப்பாட்டை அமெரிக்க அரசு எடுத்திருப்பதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் வருகிற 12-09-15 சனிக்கிழமை அன்று தமிழகமெங்கும் கண்டனத் துண்டறிக்கைகளை மக்களுக்கு வழங்கும் பணியில் தமிழர் தேசிய முன்னணித் தோழர்கள் ஈடுபடுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.