அமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை -பிரான்ஸ் கண்டனம்

வெள்ளி நவம்பர் 16, 2018

என்ன பேசுவது என்று கூட தெரியாமல் பேசும் அமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை என பிரான்ஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.

அமெரிக்க அதிபர் தனது டுவிட்டரில் அடிக்கடி எதாவது ஒரு சர்ச்சையான டுவிட் போட்டு மாட்டி கொள்வார்.  அப்படித்தான் சமீபத்தில் தீபாவளி குறித்து  சர்ச்சையாக வாழ்த்து தெரிவித்து பின்னர் அது நீக்கப்பட்டது. தற்போது  பாரீஸ் தாக்குதல் நினைவு  நாளின்போது ஒரு சர்ச்சை டுவிட்டை போட்டு உள்ளார்.

இந்த டுவிட் குறித்து பிரான்ஸ் அரசு செய்தி தொடர்பாளர்,  2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாரீஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக நாங்கள் அஞ்சலி செலுத்தும் நாளில் என்ன பேசுவது என்று கூட தெரியாமல் பேசும் அமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை என்று  சரியான சாட்டையடி கொடுத்துள்ளார்.

Emmanuel Macron suggests building its own army to protect Europe against the U.S., China and Russia. But it was Germany in World Wars One & Two - How did that work out for France? They were starting to learn German in Paris before the U.S. came along. Pay for NATO or not!

— Donald J. Trump (@realDonaldTrump) November 13, 2018

பிரான்சின் அரசு செய்தி தொடர்பாளர் கிரிவியக்ஸ், நாங்கள் பாரீசிலும் செயிண்ட்-டெனிசிலும் அநியாயமாக கொல்லப்பட்ட எங்கள் நாட்டவர்கள் 130 பேரை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம், எனவே ஆங்கிலத்தில் தெளிவாக கூறுகிறேன், அடிப்படை நாகரீகம் இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்றார்.

இதற்கிடையில், பல விமர்சனங்களை டுவீட்களாக வெளியிடும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், பிரான்சும் அமெரிக்காவும் ஒருவரை ஒருவர் சரியான விதத்தில் மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மேக்ரான், நான் டுவீட்களுக்கு பதிலளிக்க வேண்டும் என பிரான்ஸ் மக்கள் எதிர்பார்க்கவில்லை என்றார். ஐரோப்பிய ராணுவம் ஒன்று தேவை என மேக்ரான் அறிவித்ததற்கு, தனது கோபத்தைக் வெளிக்காட்டும் விதத்தில் டிரம்ப், அமெரிக்க ஒயினுக்கு பிரான்ஸ் விதிக்கும் வரிகளைக் குறித்து டுவிட் செய்து இருந்தார். டிரம்பின் டுவீட்டுகள் மோசமானவையாக இருந்ததா என்று பத்திரிகையாளர்கள் கேட்க, நீங்களே உங்கள் கேள்விக்கான பதிலை கூறிவிட்டீர்கள் என்றார் மேக்ரான்.

On Trade, France makes excellent wine, but so does the U.S. The problem is that France makes it very hard for the U.S. to sell its wines into France, and charges big Tariffs, whereas the U.S. makes it easy for French wines, and charges very small Tariffs. Not fair, must change!

— Donald J. Trump (@realDonaldTrump) November 13, 2018

டிரம்ப் அமெரிக்க அரசியல் செய்கிறார் என்று நினைக்கிறேன் என்று கூறிய மேக்ரான், நான் அவரை அமெரிக்க அரசியல் செய்ய விட்டு விடுகிறேன் என்றார். உண்மையில் சொல்லப்போனால், நான் டுவீட்கள் அல்லது கருத்துக்கள் வழியாக அரசியலோ தூதரக பணியோ செய்வதில்லை என்றார் மேக்ரான்.