அமெரிக்க கடற்படையினர் 7 பேரை காணவில்லை!

June 17, 2017

7 அமெரிக்க கடற்படை உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணித்த கப்பல் ஜப்பான் கடற்பிராந்தியத்தில் வைத்து பிறிதொரு வர்த்தக கப்பலுடன் மோதியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

பிலிப்பைன்ஸ்க்கு சொந்தமான கொள்கலன் கப்பல் ஒன்றுடனேயே அமெரிக்க கப்பல் மோதியுள்ளது. கடற்படை கப்பலின் கட்டளை தளபதி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் காயமடைந்த நிலையில் உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உலகில் மிக சிறப்பான தன்மையுடைய பலமிக்க ரேடார் கட்டமைப்பை கொண்ட கப்பல் ஒன்றே விபத்தில் சிக்கியுள்ளது. இருந்த போதும் விபத்தை தவிர்த்து கொள்ள ஏன் முயற்சிக்கவில்லை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

செய்திகள்
சனி April 21, 2018

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவி வந்தது.