அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது வருத்தமளிக்கிறது

செவ்வாய் அக்டோபர் 06, 2015

இலங்கை குறித்த அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது வருத்தமளிக்கிறது என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

 

ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் பங்கேற்ற அவர் நாடு திரும்பிய போது, சென்னை விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு கூறியுள்ளார். 

 

ஐ.நா., கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. தமிழக அரசு அனைத்து கட்சி பிரமுகர்களுடன், பிரதமரை சந்திக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.