அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ்சை மணந்தார் பிரியங்கா சோப்ரா!

சனி டிசம்பர் 01, 2018

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமெரிக்க பாடகர் நிக்ஜோனாஸ், ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம் நடைபெற்றது.

தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். தன்னை விட 10 வயது குறைந்தவரான அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ் மீது பிரியங்கா சோப்ராவுக்கு காதல் மலர்ந்தது.

இந்நிலையில், இவர்களின் திருமண ஏற்பாடுகள் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி மெகந்தி விழாவுடன் ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக இருவரும் ஜோத்பூர் சென்றடைந்தனர்.  நாளை இந்து பாரம்பரிய முறைப்படி ஜோத்பூர் உமைத் பவனில் திருமணம் நடைபெற உள்ளது. முன்னதாக  ஜோத்பூர் அரண்மனையில் பட்டாசு வானவேடிக்கைகளுடன் உற்சாகமாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

 

திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் பிரபலங்கள் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் குடியேறுகிறார்கள். இதற்காக அங்கு ஆடம்பரமான வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளனர்.