அமெரிக்க பொருள்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் - பழ.நெடுமாறன்

புதன் அக்டோபர் 07, 2015

ஐ.நா.வில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை கண்டிக்கும் வகையில், அந்நாட்டுப் பொருள்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். 

 

இராமநாதபுரம் அரண்மனை முன்பாக செவ்வாய்க்கிழமை சீரழியும் தமிழகம் என்ற நூலை, தனது கட்சித் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்.  இதனையடுத்து அவர் கருத்து வௌியிட்ட போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார் என, தமிழக ஊடகமான தினமணி குறிப்பிட்டுள்ளது. 

 

அவர் பொதுக்கூட்டத்தில் மேலும் பேசியதாவது: 

 

கடந்த 2009ம் ஆண்டில் இலங்கைத் தமிழர்கள் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோரை, அந்நாட்டு அரசு இனப் படுகொலை செய்தது. அதற்கு, இன்று வரை நீதி கிடைக்கவில்லை. 

 

இந்நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும், ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. எனவே, அமெரிக்காவுக்கு பாடம் புகட்டும் வகையில், அந்நாட்டுப் பொருள்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என்றார்.