அமைச்சரவையில் மறுசீரமைப்பு ​தேவை அவசியம்!

May 20, 2017

காலதாமதமின்றி, அமைச்சரவையில் மறுசீரமைப்பை ​கொண்டுவருவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவில்லையென்றால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்கள், தொடர்ந்தும் நல்லாட்சியில் இருக்க வேண்டுமா என்று கருதவேண்டிய சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

“அமைச்சரவை மறுசீரமைப்பு கட்டாயமானது. அது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்படும். இது, கூடிய விரைவில் முன்னெடுக்கப்படவேண்டும் என்றே, சு.க கோருகின்றது. காரணம், சு.க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்று பலரும் இந்த மாற்றத்தையே விரும்புகின்றனர்” என்று அவர் கூறினார்.

மேலும், மறுசீரமைப்பின் போது, ஐக்கிய தேசியக்கட்சியினரது அமைச்சரவைப் பதவிகள் அப்படியே இருக்க வேண்டும் என்றும் சு.க வின் அமைச்சரவைப் பதவிகள் மாத்திரமே மாற்றப்படும் என்பதும், தவறான கருத்தாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். “அவ்வாறான எந்தவொரு ஒப்பந்தமும், சு.க மற்றும் ஐ.தே.கவுக்கு இடையில் இல்லை. பிரதமருடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், இரண்டு கட்சிகளிலுள்ள எந்த ஒரு அமைச்சர​​யும் நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக இரண்டு கட்சியிலுள்ள எந்தவொரு அமைச்சரையும் நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அரசியலமைப்பின் படி அதிகாரம் உண்டு” என்று அவர் கூறினார்.

செய்திகள்
புதன் யூலை 26, 2017

 தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்பும் ஈழ அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன் யூலை 26, 2017

இலங்கை போக்குவரத்துச் சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான பேருந்து, அம்பாறை –கல்முனை வீதியிலுள்ள மல்வத்தை எனுமிடத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக

புதன் யூலை 26, 2017

கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயிலை இடைமறித்து கொலன்னாவை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதையடுத்து அப்பக

புதன் யூலை 26, 2017

வவுனியா - தாலிக்குளம் பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.