அமைதிப் படைக்கு ஒழுக்கத்தில் சிறந்தவர்களை அனுப்ப வேண்டும்!

April 15, 2017

உறுப்பு நாடுகள் ஐநாவின் அமைதிப் படைக்கு ஆட்களை அனுப்பும்போது, குறித்த நபர் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடவில்லையென்பதை உறுதிப்படுத்தவேண்டுமென ஐநா பொதுச் செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கெயிட்டியில் சிறீலங்காப் படையினர் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எந்தவொரு தண்டனையும் வழங்கப்படாது, அவர்கள் மீண்டும் கெய்ட்டிக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் ஏபி செய்தி சேவை ஆய்வு நடாத்தியிருந்ததுடன், இவர்கள் தொடர்பான விசாரணையை ஐநா நடாத்தவில்லையெனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்த ஐநா பொதுச் செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், சிறீலங்காப் படையினர் நீண்ட காலத்துக்கு கெயிட்டியில் நிறுத்தப்படவில்லை. ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் பரந்துபட்ட பொறுப்புக்கூறலை உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்திய போதிலும், ஒருபோதும் உறுப்பு நாடுகள் அதுபற்றிய தகவல்களை ஐ.நாவுக்கு வழங்கியதில்லை என்றும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

செய்திகள்
புதன் April 26, 2017

வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் போர் ஒத்திகைக்

ஞாயிறு April 23, 2017

புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.