அமைதியை நிலை நாட்டுவதே புத்தாண்டு உறுதி மொழி!

January 02, 2017

உலக மக்கள் அனைவரும் முதலில் அமைதியை நிலை நாட்டுவதையே புத்தாண்டு உறுதிமொழியாக ஏற்க வேண்டும் என்று  ஐநாவின் புதிய பொதுச் செயலாளர் அன்டோனியா கட்டரஸ் வலியுறுத்தியுள்ளார். ஐநாவின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூனின்  பதவிக் காலம் கடந்த 31ம் திகதியோடு முடிவடைந்தது. 

இதனையடுத்து புதிய பொதுச் செயலாளரான போர்ச்சுகீசிய நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியா கட்டரஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக  பதவி ஏற்றார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், `உலக மக்கள் அனைவரும் முதலில் அமைதியை நிலை நாட்டுவதையே  புத்தாண்டு உறுதி மொழியாக ஏற்க வேண்டும். நாடுகளுக்கு இடையே பிரச்னைகளை தீர்க்க நான் பாலமாக விளங்குவேன்’ என்று  உறுதியளித்தார்.

2021 டிசம்பர் 31ம் திகதி வரை ஐநாவின் பொதுச் செயலாளர் பதவியில் கட்டரஸ் இருப்பார். இந்த கால கட்டத்தில் சிரியா மற்றும் ஏமன் முதல்  தெற்கு சூடான் மற்றும் லிபியா வரையிலான பிரச்னை, தீவிரவாதம் முதல் பருவமாற்றம் வரையிலான விவகாரம் இதுதவிர அமெரிக்க  அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பை சமாளிப்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் கட்டரஸூக்கு கடும் சவால் அளிப்பதாக இருக்கும்.

செய்திகள்