அம்பானியின் அசத்தலான பதில்!

Monday January 01, 2018

தன் அழகை வைத்து கொண்டு எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என சில பெண்கள் நினைப்பதுண்டு. அப்படி நினைத்த ஒரு பெண்ணுக்கு அம்பானி சாட்டையடி பதில் கொடுத்துள்ளார்.

ஒரு பெண் அம்பானிக்கு கடிதம் எழுதினார். அதில் நான் பேரழகு கொண்ட பெண். நான் 100 கோடி சம்பாதிக்கும் ஆணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என கேட்டிருந்தாள்.

அதற்கு பதில் அளித்த அம்பானி, நானும் வருடத்திற்கு 100 கோடி சம்பாதிக்கும் ஆண்தான்.

ஆனால் நான் உன்னை போன்ற பெண்ணை விரும்ப மாட்டேன். ஆணின் சம்பாத்யம் என்பது வளரும் சொத்து, பெண்ணின் அழகு என்பது குறையும் சொத்து.

இதே 10 வருடம் கழித்து உன்னிடம் இந்த அழகு இருக்காது. உன்னை போன்ற ஒரு பெண்ணுடன் ஒருவர் டேட்டிங் செல்ல வேண்டுமானால் விரும்புவார். ஆனால் திருமணம் செய்ய விரும்ப மாட்டார்கள். எனவே 100 கோடி சம்பாதிக்கும் ஆணை திருமணம் செய்யும் ஆசையை விடுங்கள். 100 கோடி சம்பாதிக்கும் ஆணாக வளர்ந்து காட்டுங்கள் என்று கூறி இருந்தார்.