அம்பாறையை திரும்பிப்பார்த்த கனடிய தேசம்!

Thursday December 28, 2017

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் அம்பாறை மாவட்டம் என்பது நாளுக்கு நாள் தமிழ் மக்களுடைய நிலையில் பாரிய வீழ்ச்சியை சந்தித்து சென்று கொண்டிருக்கும் ஒரு மாவட்டமாகும் இங்கு மூன்று இனத்தவர்கள் வாழ்கின்ற போதும் மிகவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் ஒரு இனமாக அம்பாறை மாவட்ட தமிழர்கள் காணப்படுகின்றார்கள் அவ்வாரான இடர்களை களைந்து தாங்களும் இந்த பூமிப்பந்தில் உயிர்வாழ வேண்டுமாக இருந்தால் இங்குள்ள வாழ்வாதாரத்தில் அவதியுறும் மக்களை காப்பாற்ற வேண்டியது தமிழர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ள தலையாய கடமையாகும்.

இதனை கருத்தில் கொண்டு கனடிய தேசத்தில் தாயகத்தில் இருந்து சென்று புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் அமைப்புக்கள் பல வடகிழக்கில் பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றார்கள் அந்த வகையிலேதான் கனடா நாட்டில் உள்ள பிரம்ரன் தமிழ் ஒன்றியமானது எமது அம்பாறை மக்கள் மேல் கொண்ட அதீத அக்கரை காரணமாக முதல் முதலாக மக்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் இங்குள்ள அமைப்பான மக்கள் புனர்வாழ் மீள்குடியேற்ற அபிவிருத்தி ஒன்றியம் ஊடாக அரிசிமா தயாரிப்பு நிலையம் ஒன்றினை ஆரம்பித்த வைத்துள்ளமை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 நேற்று கல்முனையில் கனடிய தேச உறவுகளினால் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காகவேண்டி அரிசிமா தயாரிப்பு நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்இ ஞா.சிறிநேசன் சிறப்பு அதிதியாக முன்னால் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சரும்இ தமிழரசுக்கட்சியின் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் மற்றும் கல்முனை பொலிஸ்நிலையத்தில் இருந்து வருகை தந்த ஏ.எல்.ஏ.வாகீட் உட்பட மதப்பெரியார்கள்இ கிராமத்து மக்கள் ஆலயங்களின் அறங்காவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.