அரசன்னாவுக்கு இறுதி வணக்கம்!

ஞாயிறு செப்டம்பர் 23, 2018

அரசன்னாவுக்கு அனைத்துலகத்  தொடர்பகம் தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி வணக்கம் செலுத்தியுள்ளனர் . தமிழீழ விடுதலை புலிகளின் தமிழீழ தேசிய துணைப்படை முன்னாள் வீரர் அரசன்னன் என்ற கற்பகம் ஆரோக்கிய நாதன்  ஞானசீலன் 20.09.2018 சாவைடந்துள்ளார் ,இவர் தமிழீழ தேசிய துணைப் படையில் மிகவும் சிறப்பாக பணியாற்றிய ஒருவர்.

தமிழீழ விடுதலை போராட்ட காலத்தில் மதியாமடுப் பகுதியில் பாகிஸ்தானின் சிறப்பு பயிற்சி பெற்ற ஆழஊடுருவும் அணியினை வழிமறித்து துணிகரத் தாக்குதல் மேற்கொண்டு அதில் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட ஆழ ஊடுருவும் அணி சிதறடிக்கப்பட்டது .இத்தாக்குதலில் துணைப்படை வீரர் ஒருவரும் வீரசாவினை அனைத்துக்கொண்டார்
இவ்வெற்றிகர தாக்குதலில் அரசண்னையும் முக்கியமானஒருவர்.

இத்தாக்குதலில் பங்குகொண்டவர்களை தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அவர்களால் கெளரவிக்கப்பட்டனர் .அத்தோடு இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் போராளிகளுக்கு சிறந்த பாதை வழி காட்டியாகவும் இருந்து தமிழீழ விடுதலை போராட்டத்தின் பெரும் பங்காற்றியுள்ளார்.  இவருக்கு எமது இறுதி வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழ விடுதலைப் புலிகள்.