அரசாங்கத்தை எவராலும் அசைக்கவே முடியாது – அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

January 02, 2017

நல்லாட்சி அரசுக்கு 2017 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாகும். அரசாங்கத்தைக் கவிழ்க்க எவராலும் முடியாது என்று பொது நிர்வாக மற்றும் முகாமைத்தவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.  

மொனராகலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். 

நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஜோக்கராக மாறியுள்ளார். இந்த நல்லாட்சி அரசாங்கத்தைப் பிரிக்கப் போவதாக அவர் கூறி வருகின்ற போதிலும், அது ஒருபோதும் இயலாத காரியமாகும் என்றும் ரஞ்சித் மத்தும தெரிவித்தார். 

தேசிய அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்தில் 160 ஆசனங்கள் உள்ளன. அதனை ஒருவராலும் அசைத்துவிட முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.  

செய்திகள்
ஞாயிறு June 24, 2018

இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது.

ஞாயிறு June 24, 2018

தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் துரைரட்ணசிங்கம்