அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரிதிநிதிகள்..!

Saturday September 22, 2018

அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரிதிநிதிகளை நியமிப்பது குறித்து பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருடன் விரைவில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். 

2015ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி நியமிக்கப்பட்ட சிவில் பிரதிநிதிகளான ஏ.ரி.ஆரியரட்ண, ராதிகா குமாரசுவாமி, சிப்லி அஸீஷ் ஆகியோரின் பதவிக்காலம் இன்று  நிறைவுக்கு வந்துள்ளது.

இதே வேளை , ஜோன் செனவிரட்ண , விஜித ஹேராத் சம்பிக ரணவக ஆகியோரே பதவிக்காலம் கடந்த 9 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

முன்னதாக விஜயதாச ராஜபக்ஷ 2017ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி இராஜினாமாச் செய்திருந்தார்.

இந்நிலையில் மேற்படி சபைக்கு ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்கள் இதுவரையில் நியமிக்கப்பட வில்லையென தெரிவித்துள்ளார்.