அரசியலில் களமிறங்க தற்போது அவரசம் இல்லை: ரஜினி

Wednesday November 22, 2017

அரசியலில் இறங்குவதற்கான அவரசம் தற்போது இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல புண்ணிய திருத்தலமான மந்திராலயம் சென்று ஸ்ரீராகவேந்திரரை தரிசித்த ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதில், அரசியல் களத்தில் எப்போது இறங்கப் போகிறீர்கள்? என்று கேட்டதற்கு, 'அரசியலில் இறங்குவதற்கான அவசரம் தற்போது இல்லை' என்று ரஜினி பதிலளித்தார். 

ரசிகர்களை எப்போது சந்திக்க இருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, 'என் பிறந்த நாளுக்குப் பிறகு ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்' என்றார். காலா படப்பிடிப்பு முடிந்து விட்டதா? என்று கேட்டதற்கு, 'காலா' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்று கூறினார்.