அரசியலில் குதிக்கிறார் அஞ்சலி!

August 10, 2017

சினிமாவில் ஹீரோயினாக ஒரு ரவுண்ட்  வந்தபிறகு பல நடிகைகள் அரசியல் களத்தில் குதித்திருக்கின்றனர். ஹேமமாலினி,  ஜெயப்ரதா தொடங்கி இன்றைக்கு ரோஜா, விந்தியா,  நமீதா வரை அரசியலில் குதித்திருக்கின்றனர்.

தற்போது  கௌதமி, கஸ்தூரி போன்றவர்கள் அடிக்கடி தங்களது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தபட்டியலில் இணைந்திருக்கிறார் அஞ்சலி.

நடிகர் ஜெய்யை காதலிக்கிறார். சீக்கிரம் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றுதான் இதுவரை அஞ்சலி பற்றி தகவல் வெளியாகிக்கொண்டிருந்தது.  திடீரென்று அவரது அரசியல் ஆசை வெளிப்பட்டிருக்கிறது. சமீபத்தில் டில்லிக்கு வந்த அவரை  காங்கிரஸ் கட்சி எம்.பி. கோதபள்ளி கீதா வரவேற்று நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளராக அழைத்துச் சென்று சுற்றிக்காட்டினார்.

இது பற்றி அஞ்சலி கூறும்போது,  ‘எனக்கு அரசியல் பிடிக்கும். அதன்மீது எப்போதுமே தனி கவனம் செலுத்துவேன். அரசியலில் கால்பதிக்க ஆவல் கொண்டுள்ளேன்’ என்றார்.

செய்திகள்
சனி December 02, 2017

ஆர்.கே.நகரில் போட்டியிடுவது பற்றி 2 நாளில் முடிவு எடுப்பேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளது சினிமா வட்டாரம் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.