அரசியலுக்குள் கால் பதித்தார் ஆதிவாசிப் பெண்!

Tuesday February 13, 2018

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக ஆதிவாசிப் பெண் ஒருவர் அரசியலுக்குள் உள்நுழைந்துள்ளார். கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் தெஹியத்தக்கண்டிய- ​ஹேனாநிகல தெற்கு மற்றும் வடக்கில் போட்டியிட்ட 37 வயதான டபிள்யு. எம். ஷிரோமாலா என்றப் பெண்ணே  வெற்றிப்பெற்று உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கல்வி பொதுதராதர சாதாரணதரம் வரை கல்வி பயின்றுள்ள இவர், 1369 வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார்.

தான் பெற்ற வெற்றிப் ​பெற்றமைத் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ” தன்னுடைய மக்களுக்காகவும், அழிந்து செல்லும் தனது கலாசாரம் மற்றும் மதம் மற்றும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் தேவையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதுடன், தான் மாகாணச​பைத் தேர்தல் மற்றம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.