அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ். பல்லைக்கழக மாணவர்கள் செவ்வாயன்று பேரணி

நவம்பர் 12, 2017

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த கைதிகளின் வழக்குகளை வவுனியாவுக்கு மாற்றக் கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளனர். 

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் யாழ். பல்கலைக்கழக அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்களும் பங்குபற்றி அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகக் கோஷம் எழுப்புவர். 

துமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களையே நம்பியிருக்கின்றனர் என பகிரங்க அறிக்கை விடுத்திருந்தனர். 

கதிரை ஏறும் ஆசையுடன் அரசியல் நடத்தும் தமிழ்க் கட்சிகளை தாங்கள் நம்பத் தயாராக இல்லை எனவும் மாணவர்கள் மீது தமக்கு பூரண நம்பிக்கை உள்ளது எனவும் பகிரங்க அறிக்கையில் விபரித்திருந்தனர். 

இதற்கு ஏற்பவே, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த மூன்று கைதிகளும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை நிறுத்தியிருந்தனர். 

மாணவர்களும் கைதிகளுக்கு ஆதரவாகப் பல போராட்டங்களை நடத்தியிருந்தனர். 

இந்த நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமமாறு கோரி அவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர். 

மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் மூடப்பட்ட யாழ். பல்கலைக்கழகம் கல்விச் செயற்பாட்டுக்காக நாளை திறக்கப்படவுள்ள நிலையில், திறந்த அடுத்த நாளே மாணவர்களின் போராட்டம் நடத்தவுள்ளனர். 

செய்திகள்
புதன் January 17, 2018

ஆயுதத்தைசிறிலங்கா இறக்குமதி செய்தவரைக் கண்டுபிடித்தால், லசந்தவின் கொலையின் மர்ம முடிச்சுக்கள் பலவும் அவிழும்

புதன் January 17, 2018

புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் துறையில் பணியாற்றி வருவோருக்கு 10 ஆயிரம்