அரசியல் கைதிகளுக்காக திங்கட்கிழமை யாழில் போராட்டம்!

ஒக்டோபர் 07, 2017

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் நாளை மறுதினம் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு முன்னால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.  அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் அமைப்பின் அமைப்பாளர் சக்திவேல் பாதர் ஊடகங்களுக்கு இன்று இதனை தெரிவித்தார். 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில், யாழில் செயற்படும் பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கிடையில் இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் பொது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

எதிர்வரும் திங்கட்கிழமை காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும், பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுகொண்டார். 

செய்திகள்