அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

Thursday July 19, 2018

தீவிரவாதத்தை ஒழிக்கும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதுவரையில் 107 அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் தெரிவித்துள்ளார்.  அவர்களை விடுதலை செய்வதாக பிரதமருடனும் எதிர்கட்சி தலைவருடனும் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கடந்த தினத்தில் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்த போது, இது தொடர்பில் அவரிடம் தெரிவித்தாகவும் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் மேலும் தெரிவித்துள்ளார்.