அரசியல் மற்றும் போர்க்கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யேர்மனியில் "உருகி வேண்டும் போராட்டம் "

புதன் நவம்பர் 11, 2015

யேர்மனியின்  தலைநகரத்தில் வெளிவிவகார அமைச்சுக்கு முன் உள்ள சதுக்கத்தில்  அரசியல் மற்றும் போர்க்கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும்  வெள்ளிக்கிழமை 13.11.2015 அன்று மாலை 16:30 மணிக்கு நடைபெற உள்ளது .எமது உறவுகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம் .

நீண்டகாலமாக எதுவித விசாரணைகளுமின்றி சிறைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும்; தம்மை விடுதலை செய்யவலியுறுத்தி சாகும்வரை உணவு தவிர்ப்பு  போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் சிறிலங்கா அரசாங்கம் எதுவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

குறிப்பாக எதிர்வரும்  வெள்ளிக்கிழமை 13.11.2015 அன்று தமிழர் தாயகத்திலும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல போராட்டங்கள் முன்னெடுகப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .


மேலதிக தொடர்புகளுக்கு:‍   தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி / ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி