அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு!

Wednesday November 15, 2017

எதிர்வரும் ஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை நூற்றுக்கு 15 வீதம் அதிகரிக்கவுள்ளதாக, உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.  நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதற்கமைய, அலுவலக உதவியாளர்களுக்கான அடிப்படைச் சம்பளம் 14,000த்தில் இருந்து 23,000 ரூபா வரையும், விஷேட வைத்தியர்களின் அடிப்படைச் சம்பளம் 60,000 ரூபாவில் இருந்து 69,756 ரூபா வரையிலும், சட்டமா அதிபரின் சம்பளம் 110,000 ரூபா வரையிலும் அதிகரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றுக்காக வருடாந்தம் 12 பில்லியன் ரூபாய் மேலதிக நிதி தேவை எனவும், அமைச்சர் வஜிர அபேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.