அரச குடும்பத்தின் அழகியை தவற விட்ட ஹரி!

செவ்வாய் மே 15, 2018

பிரித்தானிய அரச குடும்பத்தின் அழகி பெண் மட்டுமல்லாமல் உலகின் அரச குடும்ப வாரிசுகளில் கவர்ச்சியான மொடல் அழகி என கூறப்படும் Lady Amelia Windsor-க்கு ஹரியின் திருமணத்திற்கு அழைப்பிதழ் விடுக்கவில்லை என கூறப்படுகிறது.

 22 வயதான Amelia பிரித்தானிய அரச குடும்பத்தின் Duke of Kent- யின் பேத்தி. பிரித்தானிய மகாராணியின் உறவினர் Duke of Kent ஆவார். இதனால் இளவரர் ஹரி மற்றும் வில்லியம்முக்கு Amelia சகோதரி முறை ஆகும்.

 அரச குடும்பத்தின் அரியணை வரிசையில் 37 வது வரிசையில் இருக்கும் Amelia, பேஷனில் அதிக ஈடுபாடு இருந்த காரணத்தால், Dolce & Gabbana பேஷன் நிறுவனத்தின் மொடலாக இருக்கிறார்.

 2016 ஆம் ஆண்டில் Tatler என்ற இதழின் அட்டை படத்துக்கு போஸ் கொடுத்து அனைவராலும் கவரப்பட்டார். ஹரிக்கு சகோதரியாக இருந்தாலும், திருமணத்திற்கு இவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, ஏனெனில், திருமணத்தில் மணமக்களை விட வேறு யாரும் கவனத்தை திசைதிருப்ப ஹரி விரும்பவில்லை என்பதால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

 ஹரி - மெர்க்கல் திருமணம் மே 19 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.