அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

யூலை 11, 2017

அருணாச்சல பிரதேசத்தில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில், 14 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நலையில், கனமழை பெய்து வரும் பாபம் பரே மாவட்டத்தின் லேப்டாப் கிராமத்தில் இன்று பிற்பகல் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, 14 பேர் மண்ணில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர், சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. அசாமை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

செய்திகள்