அறவழியில் போராடிய மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்!

May 24, 2018

 ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த நூறு நாட்களாக தூத்துக்குடி பகுதி மக்கள் பல்வேறு விதமான அறவழி போராட்டங்களை முன்னெடுத்து போராடி வந்துள்ளார்கள். நேற்று மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய மக்கள் மீது தமிழக காவல்த்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் உட்பட 11 பேர் இதுவரைக்கும் பலியாகியிருப்பது கவலையளிக்கின்றது.
 
மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத தமிழக அரசு சனநாயக முறையில் போராடிய மக்கள் மீது கடும் வன்முறையை ஏவி 11 பேர்களின் உயிர்களைக் கொலை செய்திருக்கின்றது. இந்தச் செய்தி ஒட்டுமொத்த தமிழக மக்களையும், ஈழத்தமிழர்களையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று நடந்த இந்த அவல நிலைகளுக்குத் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும், போராட்டத்தை தனது அதிகாரம் கொண்டு அடக்கி ஒடுக்கி விடலாம் என்கின்ற தமிழக அரசின் போக்கானது சிறீலங்கா அரசு எவ்வாறு தமிழீழ மக்களை அடக்கி ஒடுக்கி தனது போர்வெறியை தமிழர்கள் மீது இனஅழிப்பு மேற்கொண்டதையே நினைவூட்டுகின்றது.

தமிழகத்தில் பல்வேறு காரணங்களுக்காகத் தொடர்ச்சியாக தன்னெழுச்சியாக நடந்து வரும் மக்கள் போராட்டங்களை காவல்துறையை வைத்து அடக்க நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத துயரமாகவே டென்மார்க் வாழ் புலம்பெயர் தமிழர்கள் கருதுகின்றார்கள்.

மக்கள் போராட்டத்துக்குத் தீர்வு காண முடியாத தமிழக அரசு, தனது அதிகாரத்தின் மூலமாக இவ்வாறு மக்கள் மீது வன்முறையை ஏவுவது சனநாயக விழுமியங்களை மீறும் செயலாகவே பார்க்கப்படுகின்றன. இந்நடவடிக்கைக்கு டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்  தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இதுவரை உயிர் பிரிந்த 11 தமிழக உறவுகளுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்!

நன்றி

டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் 
டென்மார்க்.

செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....