அறிமுகமாகும் பெண் இசையமைப்பாளர்!

திங்கள் ஓகஸ்ட் 20, 2018

பிர்லா, பவித்ரா நடிப்பில் ஆர்.ஏ.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஊர காணோம்’ படத்தில் பெண் இசையமைப்பாளர் சந்திரா சத்யராஜ் அறிமுகமாக இருக்கிறார். 

மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தில் நடந்த உண்மையான காதல் கதையை “ஊர காணோம்” என்ற பெயரில் திரைப்படமாக்கி வருகிறார்கள். வேலவர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் கே.எஸ்.சரவணகுமார் என்பவர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தை செவிலி, மோகனா போன்ற படத்தை இயக்கிய ஆர்.ஏ.ஆனந்த் இயக்கிவருகிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நடந்த உண்மையான காதல் கதையை, அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். நவம்பர் மாத பனிபொழிவில் இந்தப்படத்தின் முக்கியமான காட்சிகள் மலைகிராமத்தில் படமாக்கப்பட்டது.

இந்த படத்திற்கான இசையை ஒரு புதிய பெண் இசையமைப்பாளர் சந்திரா சத்யராஜ் அமைக்கிறார். பாடல்களை - பிரியாகிருஷ்ணன், பரிமளாதேவி என்ற இரண்டு பெண் கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இதில் பிர்லா, ஷா, பவித்ரா, நெல்லைசிவா, தவசி, தங்கதுரை, மும்பைசீனுஜி, சசி, மகேஷ் ஏட்டா, “பிச்சைக்காரன் ஜான்”, குணாஜி, வெங்கல்ராவ், கீதா, ஜெயக்குமார் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.