அற்புதங்கள் நிகழ்த்திய அருட்சோதி!

நவம்பர் 23, 2017

அரிமா அஞ்சும்
உயிர் மெய்
அழகன்!
ஆயுத எழுத்தின்
ஒற்றைத் 
தமிழன்!
அருட்டல் அழித்த
முருகன்!
அருச்சிகனாய்
அவதாரம்
தரித்தவன்!
ஆகாயம் நுழைந்த
ஆகாயகமனம்!
அருணவம் ஆண்ட
சோழன்!
ஆணவம் அறுத்த
ஆணழகன்!
அற்புதங்கள் நிகழ்த்திய
அருட்சோதி!

சாதனையின் 
சக்கரவர்த்தி!
மண்ணைநேசித்த 
போர்த்தளபதி!
தன்னையே உருக்கிய 
மெழுகுவர்த்தி!
கொடியவனை கோதிய 
மரங்கொத்தி!
வெடித்தெழுந்தால் 
வீசியெறியும் 
கூர்மைக்கத்தி!
இவரின் சிந்தனையில் 
செறிந்திருக்கும் 
நேர்மையின் புத்தி!
கூடவே பயணிக்கும் 
வீரர்களை இழுத்தணைக்கும் 
அண்ணனின் 
அன்புச் சக்தி!
நித்திய வாழ்வில் 
நெறிபுரளா 
தானைத்தலைவனின் 
கட்டளையில் இருக்கும் 
காந்தசக்தி!
திட்டமிடலில் பொசுங்கி
எரியும்
தீயசக்தி!
எந்த இனத்துக்குமே
கிடைக்காத
அபூர்வ சக்தி!
அண்ணன்
எம் 
மன்னன்
பிரபாகரன்.

-தூயவன்-

செய்திகள்
செவ்வாய் April 24, 2018

️பிரான்சு, பிரித்தானியா, நோர்வே, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் மாணவர்கள் பட்டம் ஏற்கும்...